IAS Transfer: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்-தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ட்ரெண்டிங் செய்திகள்
நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரான ஜெயச்சந்திர பானு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநராகவும், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
மோகனுக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இலக்கா என்பது குறிப்பிடதக்கது.
இந்து அறநிலையத் துறை ஆணையராக இருந்த குமரகுருபரன் தகவல் தொழில்நுட்ப துறைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா ஆதிதிராவிடர் நலத் துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு சிறப்புச் செயலாளராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் K.V.முரளிதரன் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையராக உள்ள கிராந்தி குமார் பட்டி கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்து அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் - ஆட்சியர் சஞ்சீவனா, தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் முழு விவரம்: