OPS About NDA: ’பாஜக கூட்டணி அமைப்பது குறித்து நாளை முடிவு’ ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
“காவிரி விவகாரத்தில் உரிய பங்கீட்டை தர வேண்டும்”
பாஜக கூட்டணியில் இணைவந்து குறித்து நாளை மாலை உரிய பதில் அளிக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் காவிரி பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, காவிரி விவகாரம் பல கட்டங்களை கடந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டபோராட்டம் நடத்தி ஜெயலலிதா அவர்கள் நிலையான உத்தரவை பெற்றார்கள். அதை மாற்றவோ திருத்தம் செய்யவோ முடியாது. அந்த அரசாணையில் என்ன பங்கீடு உள்ளதோ அதை தர வேண்டும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விளகி உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இன்றைக்கு சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். நல்லதை பற்றி பேசுவோம் எனக்கூறி பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.
பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக - பாஜக கூட்டணி பிளவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நாளை மாலை உரிய பதில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும் என ஓபிஎஸ் கூறினார்.
டாபிக்ஸ்