EPS: 'எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை'.. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: 'எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை'.. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை!

EPS: 'எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை'.. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை!

Karthikeyan S HT Tamil
Published Mar 25, 2025 04:08 PM IST

பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் உறுதியான முடிவு எடுக்காததும் திமுக கூட்டணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

'எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை'.. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை!
'எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை'.. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை!

டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "முக்கிய நபர் யாரையும் சந்திக்க வரவில்லை, டெல்லியில் திறக்கப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன்." என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அதிமுக அலுவலகம் திறப்பு

அதிமுக சார்பில் கடந்த மாதம் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிலையில் தான் அந்த அலுவலகத்தை பார்வையிட தாம் டெல்லி வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026-ல்சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு உதிரி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

அதிமுக - தேமுதிக மனக்கசப்பு

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கும் அக்கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு மற்றும் பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் உறுதியான முடிவு எடுக்காததும் திமுக கூட்டணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி?

சமீபகாலமாக, பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரையொருவர் பெரிய அளவில் விமர்சனம் செய்யாமல் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை மட்டும் கூறி வரும் நிலையில், திடீர் பயணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளது தமிழக அரசியலில் பல யூகங்களை கிளப்பி இருக்கிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.