Tamil News  /  Tamilnadu  /  I Am A Debtor - Annamalai Bagheer Information
கோப்புப்படம்(ANI)
கோப்புப்படம்(ANI) ((ANI))

Annamalai: கடன்காரனாக இருக்கிறேன்-அண்ணாமலை பகீர் தகவல்

19 March 2023, 14:36 ISTPandeeswari Gurusamy
19 March 2023, 14:36 IST

நான் காவல் அதிகாரியாக 9 ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக வெளியான தகவல் அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர்ந்து அதிமுக பாஜக கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்து உள்ள நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது. அரசியல் என்பது நேர்மையாக நாணயமாக நடக்க வேண்டும், பணம் இல்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் 1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் மாற்றம் என்பது நடக்காது என்ற எண்ணத்திற்கு நான் வந்து விட்டேன். அதை என் கட்சிக்குள்ளும் பேச ஆரம்பித்துள்ளேன். வரும் காலங்களில் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக பேச உள்ளேன். 

ட்ரெண்டிங் செய்திகள்

கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை; கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி குறித்து பேசும் நேரம் விரைவில் வரும். தேர்தலை சந்திக்கும் விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.

கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது நல்லதுதான். எனது நிலைப்பாட்டில் 50 சதவீத பேருக்கு உடன்பாடும் 50 சதவீத பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது. வரும் காலங்களில் மிக தீவிரமாக பேச உள்ளேன். பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சியடையும்.

 2 ஆண்டுகள் தலைவராக இருந்த அனுபவத்தில் பேசுகிறேன். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். அரசியல் களத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் காவல் அதிகாரியாக 9 ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார். 

பாஜக மூத்த தலைவர்கள் சிலர் நேற்று அண்ணாமலை பேசியது குறித்து மறுப்பு தெரிவித்த நிலையில் இன்று அவரே வெளிப்படையாக செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்