தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Husband Arrested For Killing Wife Near Madurai

Crime: மதுரை அருகே மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்..மீண்டும் சேர்ந்து வாழ வந்தபோது துயரம்!

Karthikeyan S HT Tamil
Oct 10, 2023 08:47 AM IST

மதுரை அருகே மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

செல்வப்பிரியா, சாப்டூர் காவல்நிலையம்.
செல்வப்பிரியா, சாப்டூர் காவல்நிலையம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வேப்பம்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி (33) என்பவருக்கு செல்வபிரியாவுடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ள நிலையில் சின்னச்சாமி, மற்றும் அவரது குடும்பத்தினர் செல்வபிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களஊர் பெரியவர்களுக்கு முன்னிலையில் இருவருக்கும் இடையே சமரசம் செய்யப்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், குழந்தைக்கு மொட்டை அடித்து காதுகுத்தும் விழாவுக்கு தம்பியை அழைக்க வேண்டும் என செல்வபிரியா கூறியிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னச்சாமி மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சாப்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், செல்வபிரியாவின் தந்தை முத்துப்பாண்டி சாப்டூர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னச்சாமியை கைது செய்து அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, செல்வபிரியாவின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள், நேற்று மதுரை அரசு மருத்துவமனை பிணவறை அருகே போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், செல்வபிரியாவை அவரது கணவர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேர் கொலை செய்து விட்டனர். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுக்கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்