தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ht Unicorn Story: Upgrad's Remarkable Journey: Ronnie Screwvala's Edtech Unicorn

HT Unicorn Story: ‘ஒரே App-ல கொட்டுது கோடி!’ upGrad வெற்றி கதை!

Kathiravan V HT Tamil
Jan 04, 2024 05:45 AM IST

”கடுமையான போட்டி நிறைந்த எட்டெக் டொமைனுக்குள் அதன் கடும் சவாலை கொடுக்கும் நிறுவனமாக அப்கிராட் இருந்து வருகிறது”

அப்கிராட் நிறுவனர் ரோனி ஸ்குருவாலா
அப்கிராட் நிறுவனர் ரோனி ஸ்குருவாலா

ட்ரெண்டிங் செய்திகள்

யூனிகார்ன்கள்

இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.

அப்கிராட்

தொலைநோக்கு தொழில்முனைவோர் ரோனி ஸ்க்ரூவாலா உள்ளிட்டோரால் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்கிராட் எனும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது. 

வளர்ந்து வரும் டெக் உலகில் வகுப்பறை கல்விக்கு நிகராக ஆன்லைன் கல்வி வளர்ச்சி உள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட அப்கிராட் நிறுவனம், கல்லூரி மாணவர்கள், முதல் முறையாக வேலை தேடுபவர்கள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களுக்கு தரவு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் ஆன்லைன் கோர்க்ஸ்களை வழங்கி வருகிறது. 

மேலும் மிகச்சிறந்த உயர்க்கல்வி நிறுவனங்களாக அறியபப்டும் ஐஐஐடி-பி, பிட்ஸ் பிலானி, எம்ஐசிஏ, கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூல்  உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பாடத்திட்டங்களை அப்கிராட் வழங்கி வருகிறது. 

கடந்த 2021ஆம் ஆண்டில் அப்கிராட் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற நிலையில் அதன் வருவாய் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த 2023ஆம் நிதியாண்டில் ரூ.1,194 கோடி வருவாயை அப்கிராட் பெற்று இருந்தது. இது முந்தைய நிதியாண்டான ரூ.608 கோடியை விட 96% அதிகம். 

கடுமையான போட்டி நிறைந்த எட்டெக் டொமைனுக்குள் அதன் கடும் சவாலை கொடுக்கும் நிறுவனமாக அப்கிராட் இருந்து வருகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்