HT Unicorn Story: ஆன்லைனில் மருந்து வியாபாரம்! வளைத்து போட்ட டாடா! Tata 1mg-இன் வெற்றி கதை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Unicorn Story: ஆன்லைனில் மருந்து வியாபாரம்! வளைத்து போட்ட டாடா! Tata 1mg-இன் வெற்றி கதை!

HT Unicorn Story: ஆன்லைனில் மருந்து வியாபாரம்! வளைத்து போட்ட டாடா! Tata 1mg-இன் வெற்றி கதை!

Kathiravan V HT Tamil
Jan 12, 2024 05:45 AM IST

”HT Unicorn Story: டாடா 1mg இன் புதிய ஆன்லைன் மருந்தகத்திலிருந்து யூனிகார்ன் வரையிலான பயணம் சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடையாளமாக எழுந்து நிற்கிறது”

1mg நிறுவனர்கள் பிரசாந்த் டாண்டன், கௌரவ் அகர்வால், விகாஸ் சவுகான்
1mg நிறுவனர்கள் பிரசாந்த் டாண்டன், கௌரவ் அகர்வால், விகாஸ் சவுகான்

யூனிகார்ன்கள்

இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.

Tata 1mg  

ஆன்லைன் மருந்து விநியோக தளமான 1mg குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கி உருவாக்கப்பட்டது. 

குருகிராமை தலைமையிடமாக கொண்ட இந்த ஆன்லைன் இ-கார்மர்ஸ் பார்மஸி விற்பனைத்தளம் பிரசாந்த் டாண்டன், கௌரவ் அகர்வால், விகாஸ் சவுகான் ஆகியோரால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

பெயர் காரணம் 

ஒன் எம்ஜி நிறுவனத்திற்கான பெயர் காரணம் சுவாரஸியமானது. 1mg என்பது மருந்துகளை பற்றிய சொல்லாகும். ஒரு மருந்தின் வலிமைக்கான அடிப்படை அலகு மில்லி கிராமில் (mg) அளவிடப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, எண் ஒன்று, MG ரோட்டில்தான் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இருந்தது.

ஒன் எம்ஜிக்கு முன்பாக ஹெல்த்கார்ட் பிளஸ் என்ற இணையதளத்தை இதன் நிறுவனர்கள் தொடங்கினார். மருந்துவகைகள் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிக விரைவாக பிரபலம் ஆனது. மருந்து விநியோகத்தை தொடங்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டதால் ஒன் எம்ஜி நிறுவனத்தை தொடங்கும் திட்டம் உருவாகி 2015ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

மூன்று வித சேவைகள் 

மருந்துகள், மருத்துவர்கள், பரிசோதனை ஆய்வகங்கள் என  மூன்று பிரிவாக ஒன் எம்ஜி செயல்படுகிறது.  விரிவான இணையளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ஆயிரக்கணக்கான மக்களை இந்த தளம் ஈர்த்தது. 

1mg நிறுவனமானது ஆன்லைன் மூலம் நோயறிதல் மற்றும் ஆய்வக சோதனை சேவைகள் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கிறது. ஆன்லைன் மருந்து விநியோகம், B2B ஹெல்த்கேர் மற்றும் சந்தா அடிப்படையிலான பராமரிப்புத் திட்டங்கள் ஆகியவை முக்கிய வருவாய் ஈட்டும் காரணிகளாக உள்ளன. நிறுவனம் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில் 2020ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் 369.3 கோடியாக இருந்தது. 

டாடா உடன் கைக்கோர்த்தல் 

கடந்த 2021ஆம் ஆண்டில் டாடா டிஜிட்டல் நிறுவனம் 55% பங்குகளை வாங்கி ஒன் எம்ஜி நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் டாடா ஒன் எம்ஜி என சந்தையில் பெயர் பெற்றது.  இதன் எதிரொலியாக ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பை பெற்று யூனிகார்ன் அந்தஸ்தை நிறுவனம் பெற்றது.  

டாடா 1mg இன் புதிய ஆன்லைன் மருந்தகத்திலிருந்து யூனிகார்ன் வரையிலான பயணம் சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடையாளமாக எழுந்து நிற்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.