HT Unicorn Story: ’HR வேலையை காலி செய்த Darwinbox’ கோடிகளை குவித்தது எப்படி?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Unicorn Story: ’Hr வேலையை காலி செய்த Darwinbox’ கோடிகளை குவித்தது எப்படி?

HT Unicorn Story: ’HR வேலையை காலி செய்த Darwinbox’ கோடிகளை குவித்தது எப்படி?

Kathiravan V HT Tamil
Jan 10, 2024 05:45 AM IST

”HT Unicorn Story: பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் CRM மென்பொருள் நோக்கி தங்களது கவனத்தை செலுத்திவந்த வேளையில், HRM மென்பொருளின் தேவை அறிந்து களத்திற்கு கொண்டு வந்ததே டார்வின்பாக்ஸ் நிறுவனத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது”

Darwinbox நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ரோஹித் சென்னமனேனி, ஜெயந்த் பலேட்டி, சைதன்யா பெடி
Darwinbox நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ரோஹித் சென்னமனேனி, ஜெயந்த் பலேட்டி, சைதன்யா பெடி

யூனிகார்ன்கள்

இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.

HRM (Human resource management)

இந்தியாவில் நாளுக்கு நாள் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் நிலையில் மனித வள மேலாண்மை சார்ந்த பணிகளை துல்லியமாக செய்வதற்கான தொழில்நுட்ப உதவியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் கூட இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. 

இதனால் நுகர்வோர்களுக்கும்-நிறுவனத்திற்குமான உறவுகளையும், தொடர்புகளையும் பிணைக்கும் வகையில் CRM (Customer Relationship Management) தொடர்பான மென்பொருட்களின் மீதே பல தொழில் நுட்ப நிறுவனங்கள் கவனம் செலுத்தி வந்தது. 

நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்குமான உறவுகளையும், தொடர்புகளையும் பிணைக்கும் விதமான தொழில்நுட்பங்களுக்கான தேவை இருப்பதை புரிந்து கொண்ட நுண்ணறிவு மிக்க  மூன்று தொழில்முனைவோர்கள் HRM (Human resource management) எனப்படும் மனிதவள மேலாண்மை மென்பொருளான டார்வின்பாக்ஸை உருவாக்கினர். க்ளவுட் தொழில் நுட்பத்தின் மூலம் வழங்கும் சேவைகளை இந்தியாவின் பல முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. 2015ஆம் ஆண்டில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு நிறுவப்பட்ட, இந்த புதுமையான தளம் விரைவாக யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது.

நிறுவனர்கள் 

டார்வின்பாக்ஸ் நிறுவனத்தை சைதன்யா பெட்டி, ஜெயந்த் பலேட்டி, ரோஹித் சென்னமனேனி ஆகியோர் இணைந்து உருவாகினர்.  டார்வின் பாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தயாரிப்பு தலைமையுமான சைதன்யா பெடி, பொறியியல் பட்டமும், எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர், Ernst & Young உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. 

மற்றொரு இணை நிறுவனரான ஜெயந்த் பலேட்டி சென்னை ஐஐடி மற்றும் லக்னோ ஐஐஎம்மில் படித்தவர். அவரது நிதிசார்ந்த உண்ணரிவுகள் துணிகர முதலீடு மற்றும் மூலோபாய ஆலோசனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

மற்றொரு இணை நிறுவனரான ரோஹித் சென்னமனேனி,  கூகுள் மற்றும் மெக்கின்சி & கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.  

SaaS - வணிகம்

டார்வின்பாக்ஸ் மென்பொருளின் வணிகமானது SaaS- எனப்படும் வணிக மாடலில் செயல்பட்டு வருகிறது. 

ஊதியம், ஆட்சேர்ப்பு, பணியாளர் ஈடுபாடு, திறமை மேலாண்மை, மக்கள் பகுப்பாய்வு மற்றும் வருகை, விடுப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை டார்வின்பாக்ஸ் மூலமே செய்துவிட முடியும். 

கோவிட் தொற்றுக்கு பிறகு இது போன்ற மென்பொருட்களின் தேவை சந்தைகளில் அதிகரித்தது டார்வின்பாக்ஸ் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.  

கோவிட் தொற்றின் தாக்கம் குறைந்த கடந்த 2022ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீடுகள் உடன் யூனிகார்ன் பட்டியலில் டார்வின் பாக்ஸ் இணைந்தது. 2025ஆம் ஆண்டுக்குள் நிறுவனம் லாபத்தை அடையும் என்றும் அதே ஆண்டில் ஐபிஓ செல்ல திட்டமிடுவதாகவும் அதன் இணை நிறுவனர்களில் ஒருவரான ரோஹித் சென்னமனேனி தெரிவித்திருந்தார். 

பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் CRM மென்பொருள் நோக்கி தங்களது கவனத்தை செலுத்திவந்த வேளையில், HRM மென்பொருளின் தேவை அறிந்து களத்திற்கு கொண்டு வந்ததே டார்வின்பாக்ஸ் நிறுவனத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.  

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.