HT Unicorn Story: ’மூடப்பட்ட ரெஸ்டாரண்ட்! திறக்கப்பட்ட கிளவுட் கிச்சன்’ கோடிகளை கொட்டும் Rebel Foods வெற்றி கதை!-ht unicorn story inside rebel foods exploring the visionary founders behind the unicorn - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Unicorn Story: ’மூடப்பட்ட ரெஸ்டாரண்ட்! திறக்கப்பட்ட கிளவுட் கிச்சன்’ கோடிகளை கொட்டும் Rebel Foods வெற்றி கதை!

HT Unicorn Story: ’மூடப்பட்ட ரெஸ்டாரண்ட்! திறக்கப்பட்ட கிளவுட் கிச்சன்’ கோடிகளை கொட்டும் Rebel Foods வெற்றி கதை!

Kathiravan V HT Tamil
Jan 11, 2024 05:30 AM IST

”HT Unicorn Story: உலகளாவிய உணவு விநியோகச் சந்தை 2030ஆம் ஆண்டுக்குள்பத்து மடங்கு அதிகரித்து $35 பில்லியனாக உயரும் என்று யுபிஎஸ்ஸின் எவிடன்ஸ் லேப் கணித்துள்ள நிலையில் க்ளவுட் கிச்சன் வணிகங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய வாய்ப்புகள் உருவாக்கி வருதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது”

Rebel Foods நிறுவனர்கள் கல்லோல் பானர்ஜி மற்றும் ஜெய்தீப் பர்மன்
Rebel Foods நிறுவனர்கள் கல்லோல் பானர்ஜி மற்றும் ஜெய்தீப் பர்மன்

யூனிகார்ன்கள்

இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.

தொடக்கம்

உலகின் மிகப்பெரிய இணைய உணவக நிறுவனம் என்று தன்னை பறைசாற்றிக் கொள்ளும் இந்திய நிறுவனமான Rebel Foods யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற கதை சுவாரஸியமானது. கல்லோல் பானர்ஜி மற்றும் ஜெய்தீப் பர்மன் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இத்தாலிய பீட்சாக்கள் முதல் இந்திய தோசைகள் வரை பல வகையான உணவு வகைகளை சமைக்கின்றது. 

2012 ஆம் ஆண்டு இந்தியாவில் பார்மன் INSEAD வணிகப் பள்ளியின் வகுப்புத் தோழன் கல்லோல் பானர்ஜியுடன் இணைந்து, ஃபாஸோஸ் எனப்படும் செங்கல் மற்றும் மோட்டார் உணவகச் சங்கிலியைத் தொடங்கினார். 

மூடப்பட்ட ரெஸ்டாரண்ட்

50 உணவக சங்கிலிகள் திறக்கப்பட்ட நிலையில் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வாடகை கட்டுப்படி ஆகாததால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனத்தின் முழு செயல்பாட்டை நிறுத்தியது. 

கிளவுட் கிச்சன் ஐடியா

மும்பையில் 100 சதுரடி பரப்பளவில் இயங்கும் ஒரு கடைக்கு மாதம் ஒருலட்சம் வாடகை தரவேண்டிய நிலை இருந்தது நிறுவனத்தை பெரும் நஷ்டத்திற்குள்ளாக்கியது.  வாடிக்கையாளர்களிடம் இருவரும் எடுத்த கருத்து கணிப்பில் இதுவரை பெரும்பாலானோர் நேரடியாக கடைக்கு வந்து உணவு சாப்பிட்டது இல்லை, என்றும் டெலிவரி மூலமாகவே உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதும் தெரிய வரவே ரெஸ்டாரண்ட் திட்டம் க்ளவுட் கிச்சனை நோக்கி சென்றது. 

கோடிகள் கொட்டுகிறது 

இதன் விளைவாக 2012ஆம் ஆண்டில் 4 பெருநகரங்களில் 50 க்ளவுட் கிச்சன்கள் திறக்கப்பட்டது. 2020ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருமானம் 561 கோடியாக உயர்ந்தது. இதனால் 320 கிளவுட் கிச்சன்களுடன் 35 நகரங்களுக்கு ரெபேல் ஃபுட்ஸ் விரிவு அடைந்தது. 

2020 ஆம் ஆண்டில், ரெபெல் ஃபுட்ஸ் இந்தியாவில் வெண்டியின் கிளவுட் சமையலறைகளை பிரத்தியேகமாக உருவாக்குவதற்கான உரிமத்தைப் பெற்றது. இது போன்ற சுமார் 250 டெலிவரி-ஒன்லி சமையலறைகளை 10 ஆண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் திறந்து வருகிறது.

பிரபல உணவு பிராண்டுகளான ஃபாசோஸ், பெஹ்ரூஸ் பிரியாணி, ஓவன்ஸ்டோரி பீட்சா, மாண்டரின் ஓக், தி குட் பவுல், ஸ்லே காபி போன்ற உணவு பிராண்டுகளுக்கு 70 க்கும் மேற்பட்ட நகரங்களில் 450 சமையலறைகள் வழியாக ரெபெல் ஃபுட்ஸ் உணவு தயாரிப்பு பணிகளை செய்து வருகிறது. 

யூனிகார்ன் அந்தஸ்து

கடந்த 2021ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை பெற்ற ரெபல் ஃபுட்ஸ் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது. உலகளாவிய உணவு விநியோகச் சந்தை 2030ஆம் ஆண்டுக்குள் பத்து மடங்கு அதிகரித்து $35 பில்லியனாக உயரும் என்று யுபிஎஸ்ஸின் எவிடன்ஸ் லேப் கணித்துள்ள நிலையில் க்ளவுட் கிச்சன் வணிகங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய வாய்ப்புகள் உருவாக்கி வருதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.