HT Unicorn Story: ’Reselling கான்செப்டால் யூனிகார்ன் ஆன நிறுவனம்!’ மீஷோ வெற்றி கதை!
”HT Unicorn Story: "மேரி ஷாப்" என்ற இந்தி வார்த்தையின் சுருக்கமே Meesho ஆகும்”

HT Success Story மற்றும் HT Flop Story வரிசையில் புத்தாண்டு முதல் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு என்ற இலக்கை அடைந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த தொடர் HT Unicorn Story.
யூனிகார்ன்கள்
இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.
மீஷோவின் தொடக்கம்
போட்டிகள் நிறைந்த பரபரப்பான இந்திய இ-காமர்ஸ் உலகில், மீஷோ வளர்ந்த நிறுவனங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. விதித் ஆத்ரே , சஞ்சீவ் பர்ன்வால் ஆகியோரால் 2015ஆம் ஆண்டு மீஷோ தொடங்கப்பட்டது. "மேரி ஷாப்" என்ற இந்தி வார்த்தையின் சுருக்கமே Meesho ஆகும்.
இந்த பெங்களூரை தளமாகக் கொண்ட இயங்குதளம் ஒரே மாதிரியான கொள்கைகளை மீறி யூனிகார்ன் அந்தஸ்துக்கு உயர்ந்தது, இதன் மதிப்பு $5 பில்லியனுக்கும் அதிகமாகும். ஆனால் சிறு வணிகங்கள் மற்றும் மறுவிற்பனையாளர்களை இலக்காகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் எப்படி இத்தகைய தலைசுற்றல் உயரத்தை அடைந்தது?
ரீசெல்லிங் யுக்தி
ஏற்னெவே அமேசான், ப்ளிகார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் இந்தியாவில் இயங்கி வந்த நிலையில் தனது தனித்துவமான வணிக வியூகத்தால் பலரின் கவனத்தை பெற்றது. சிறு வணிகங்கள் மற்றும் மறுவிற்பனையாளர்களை இ-காமர்ஸ் வணிகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அதிக வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மீஷோ மின்வணிகத்தை ஜனநாயகப்படுத்தியது.
மொபைல் போன்களுக்கு முன்னுரிமை
இந்தியாவில் மொபைல் போன்களின் ஆதிக்கத்தை உணர்ந்து, மீஷோ மொபைல் வணிகங்களுக்கு முன்னுரிமை அளித்தது. குறைந்த தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களுக்காகவும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மீஷோ செயலி வடிவமைக்கப்பட்டது.
ஹைப்பர் லோகல்
பல்வேறு பிராந்தியங்களின் பல்வேறு தேவைகளைப் புரிந்துகொண்டு, மீஷோ உள்ளூர்மயமாக்கப்பட்ட தயாரிப்புகளை சந்தைக்கு வழங்கியது. இந்த ஹைப்பர்லோகல் அணுகுமுறை 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களை தாண்டி கிராமபுறங்கள் வரை மிஷோவை கொண்டு சென்றது.
'மீஷோப்ரீனர்ஸ்
மீஷோ ஒரு தளத்தை மட்டும் உருவாக்கவில்லை; இது ஒரு புதிய தலைமுறை தொழில்முனைவோரை மேம்படுத்தியது. இல்லத்தரசிகள், மாணவர்கள் ஆகியோர் சொந்தமாக நிதி ஈட்ட மீஷோ வழிவகை செய்தது. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 300 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதன் மூலம் மீஷோ யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது.

டாபிக்ஸ்