HT Unicorn Story: ‘வீட்டு வேலையில் கோடிகளை கொழிக்கும் நிறுவனம்!’ அர்பன் கம்பெனி வெற்றி கதை!
“HT Unicorn Story: தொலைநோக்கு சிந்தனை அசாதாரண வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு அர்பன் கம்பெனி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு”
HT Success Story மற்றும் HT Flop Story வரிசையில் புத்தாண்டு முதல் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு என்ற இலக்கை அடைந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த தொடர் HT Unicorn Story.
யூனிகார்ன்கள்
இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.
நிறுவனர்கள்
வீட்டு சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள அர்பன் கம்பெனி கடந்த 2014 ஆம் ஆண்டில் அபிராஜ் பால், வருண் கைதான் மற்றும் ராகவ் சந்திரா ஆகியோரால் நிறுவப்பட்டது.
பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் முன்னாள் ஆலோசகரான அபிராஜ் பால், வருண் கைதான் மற்றும் ராகவ் சந்திரா ஆகியோருடன் இணைந்து தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினர்.
ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎம் அகமதாபாத் முன்னாள் மாணவரான வருண், முன்பு பெயின் & கம்பெனியில் பணிபுரிந்தார். ராகவ், ஐஐடி கான்பூர் மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர், ட்விட்டர் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனங்களில் பணியாற்றினார்.
தி அர்பன் கம்பெனி தொடக்கம்
அர்பன் கம்பெனியின் தோற்றம் எளிமையான மற்றும் ஆழமான அவதானிப்பிலிருந்து உருவானது. இந்தியாவில் அமைப்பு சாராத தொழில்களாக இருந்த வீட்டு சேவைகள் தொழிலை ஒருங்கமைப்பதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்பதே அர்பன் கம்பெனியின் நோக்கம்.
வீட்டு வேலைகளை செய்யும் திறமையான பணியாளர்களையும், திறமையான சேவை வேண்டும் என்று தேடுபவர்களையும் இணைக்கும் தளமாக அர்பன் கம்பெனி கட்டமைக்கப்பட்டது.
மொபைல் செயலி மூலம் அணுகக்கூடிய தேவைக்கேற்ப இயங்குதளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அர்பன் நிறுவனம் பாரம்பரிய வீட்டு வேலைகள் செய்யும் பணிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தந்தது.
வீட்டை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்த்தல் முதல் அழகு சார்ந்த சேவைகள் மற்றும் ஆரோக்கிய அமர்வுகள் வரையிலான சேவைகளை சிரமமின்றி முன்பதிவு செய்யும் தளமாக அர்பன் கம்பெனி இருந்தது.
யூனிகார்ன் அந்தஸ்து
Sequoia Capital, Steadview Capital மற்றும் Accel போன்ற நிறுவனங்களில் இருந்து முதலீட்டை பெற்ற அர்பன் கம்பெனி அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அதன் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செய்தது.
கடந்த 2021ஆம் ஆண்டில் 188 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதன் மூலம் யூனிகார்ன் அந்தஸ்தை அர்பன் கம்பெனி பெற்றது.
இந்தியா மட்டுமின்றி UAE, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற சர்வதேச சந்தைகளிலும் அர்பன் கம்பெனி தனது சேவையை விரிவு படுத்தி உள்ளது. தொலைநோக்கு சிந்தனை அசாதாரண வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு அர்பன் கம்பெனி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
டாபிக்ஸ்