தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ht Unicorn Story: From Bigfoot To Unicorn: Shiprocket's Journey To E-commerce Logistics Domination

HT Unicorn Story: ’டெலிவரியால் கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்!’ Shiprocket வெற்றி கதை!

Kathiravan V HT Tamil
Jan 15, 2024 06:00 AM IST

”HT Unicorn Story: 24 மாதங்களில் லாபம் ஈட்டக்கூடிய வேகமான லாஜிஸ்டிக் பிராண்ட் ஆக ஷிப்ராக்கெட் உருவெடுத்தது”

ஷிப்ரோக்கெட் நிறுவனத்தின் நிறுவனர்கள்
ஷிப்ரோக்கெட் நிறுவனத்தின் நிறுவனர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இ-காமர்ஸ் வணிகம்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் வளர்ந்து வரும் இ-காமார்ஸ் வணிகத்தில் டெலிவரி என்பது சவால் நிறைந்ததாகவே உள்ளது. சரியான நேரத்தில், பொருட்களை சேதாரமின்றி வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலைகளை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தப்போது, இந்த பிரச்னைக்கே ஒரு தீர்வை கொண்டு வந்து பல்வேறு சிறு இ-கார்மர்ஸ் வணிகர்களுக்கு பெரும் வாய்ப்புகளை ஷிப்ராக்கெட் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.  

ஷிப்ரோக்கெட்டின் இணை நிறுவனர்களான சாஹில் கோயல் மற்றும் கௌதம் கபூர் உள்ளிட்டோர் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டில் ஷிப்ராக்கெட்டை தொடங்கினர்.  

வெற்றி பயணம் 

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணிக்கையை கொண்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு திறமையான மற்றும் செலவு குறைந்த ஷிப்பிங் தீர்வுகள் தொடர்பாக சந்தையில் குறிப்பிடத்தக்க இடைவெளியை அடையாளம்  கண்ட நிலையில், அதன் புதுமையான தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக ஆர்டர் கண்காணிப்பு, பல கேரியர் ஒருங்கிணைப்புகள் மற்றும் நிகழ்நேர பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இயங்குதளம் வழங்குகிறது.   

யூனிகார்ன் அந்தஸ்து

ஷிப்ரோக்கெட்டின் தொடக்கத்திலிருந்து ஈ-காமர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் துறையில் யூனிகார்ன் நோக்கிய பயணமானது 2022ஆம் ஆண்டு நடந்தது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்தது. 24 மாதங்களில் லாபம் ஈட்டக்கூடிய வேகமான லாஜிஸ்டிக் பிராண்ட் ஆக ஷிப்ராக்கெட் உருவெடுத்தது. 

WhatsApp channel

டாபிக்ஸ்