HT Success story: ’காப்பி அடித்தால் கோடிகளை குவிக்கலாம்!’ LinkedIn நிறுவனரின் வெற்றி கதை!
”ஏற்கெனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் வணிக மாதிரியை கொண்டு வேறு துறைசார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகளை அளிப்பது குளோனிங் எனப்படுகிறது”
LinkedIn நிறுவனத்தை நிறுவியதற்காக புகழ்பெற்ற ரீட் ஹாஃப்மேன் ஆகஸ்ட் 5, 1967ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் பிறந்தார். தொழில்நுட்பத்தின் மீதான ஈர்ப்பு ஆரம்பத்திலேயே அவரிடம் இருந்து வெளிப்பட்டது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆப்பிள் முதல் பேபால் வரை...!
1994ஆம் ஆண்டு ஆப்பிள் கம்யூட்டர் நிறுவனத்தில் சேர்ந்த அவர், eWorld எனப்படும் ஆன்லைன் சேவை தளத்தில் பணியாற்றினார். பின்னர், புஜிட்சூ நிறுவனத்தில் சேர்ந்ததும் தொழில்முனைவு மீதான அவரது ஆர்வம் அதிகரித்தது. சோஷியல் நெட் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் ஆன்லைன் பணப்பறிமாற்ற சேவை நிறுவனமான பேபால் நிறுவனத்தில் COO பொறுப்பில் சேர்ந்தார். சோஷியல்நெட் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை என்றாலும், சமூக ஊடக உலகில் ஹாஃப்மேனின் நுழைவுக்கான அடித்தளத்தை அது அமைத்தது.
’வாழ்கையை மாற்றிய Match.com’
Match.com என்ற ஆன்லைன் டேட்டிங் தளம் அப்போது அமெரிக்காவில் சக்கைபோடு போட்டுக் கொண்டு இருந்தது. இணையதளம் மூலம் தங்களுக்கான வாழ்கை துணையை கண்டறிய முடியும் என்பதும் அவர்களோடு பழக முடியும் என்பதும் இதன் பெரும் பலமாக பார்க்கப்பட்டது. இந்த தளத்தில் வெற்றியால் ஈர்க்கப்பட்ட அவர், தொழில் வல்லுநர்களுடனான பிணைப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற தளத்தை உருவாக்க திட்டமிட்டார்.
LinkedIn-இன் பிறப்பு!
2002ஆம் ஆண்டில் ரீட் ஹாஃப்மேன் LinkedIn என்ற தளத்தை நிறுவினார், இது தொழில்முறை நெட்வொர்க்கிங்கை மறுவரையறை செய்தது. உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களை இணைக்கும் டிஜிட்டல் சூழலை இது உருவாக்கியது.
வெற்றியை கொடுத்த குளோனிங் ஐடியா
ஏற்கெனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் வணிக மாதிரியை கொண்டு வேறு துறைசார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகளை அளிப்பது குளோனிங் எனப்படுகிறது. காதலர்களை இணைக்கும் Match.com தளத்தின் வணிக மாதிரியை கொண்டு தொழில் வல்லுநர்களை இணைக்கும் புதிய வணிக தளத்தை LinkedIn உருவாக்கி உள்ளது.
இதன் மூலம் தற்போது உலக அளவில் 830 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட தளமாக LinkedIn உருவெடுத்துள்ளது. தொழில்முறை சார்ந்த புதிய வாய்ப்புகளை கண்டறிவதில் புதிய புரட்சியை LinkedIn ஏற்படுத்தி உள்ளது. தொழில் முன்னேற்றம், திறமையாளர்களை கண்டறியதல் கையகப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டிற்கு இந்த தளம் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறி உள்ளது.
LinkedIn - தளத்தின் மகிமையை உணர்ந்த பில்கேட்ஸின் மைக்ரோஸாப்ட் நிறுவனம் 2016ஆம் ஆண்டு 26.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்நிறுவனத்தை கையகப்படுத்தியது. LinkedIn தளத்தின் விறுவிறு வளர்ச்சி தற்போது ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் தாண்டி வருவாயை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
ஸ்டார் அப் நிறுவனங்களில் முதலீடு
ஹாஃப்மேனின் செல்வாக்கு LinkedInக்கு அப்பால் நீண்டுள்ளது. அவர் சிலிக்கான் பள்ளத்தாக்கின் நெட்வொர்க்கிங் வட்டங்களில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். அவரது திறன் பல வெற்றிகரமான தொடக்கங்களில் முதலீடுகளுக்கு வழிவகுத்தது. கிரேலாக் பார்ட்னர்ஸில் பங்குதாரராக, பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஏர்பின்ப், ஃபேஸ்புக் மற்றும் ஜிங்கா போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
வாழ்கை பாடம்!
"Start with Why: How Great Leaders Inspire everyone to Take Action" மற்றும் "Blitzscaling: The Lightning-Fast Path to Building Massively Valueable Companies" உட்பட பல புத்தகங்களை அவர் எழுதி உள்ளார். வணிகத்திற்கு நெட் ஒர்க் முக்கியம் என்பார்கள் ஆனால் அதற்காகவே ஒரு தனி நெட் ஒர்க் தளத்தை உருவாகி உள்ள ஹாஃப்மேனின் வாழ்கை நமக்கு சொல்வது ’Network is the Networth’ என்பதுதான்! மீண்டும் நாளை சந்திப்போம்!
டாபிக்ஸ்