HT Book SPL: ‘CEO பார்வையில் நாட்டு நடப்பு!’ கைப்பட எழுதிய ஞாயிறு கடிதம்! நூல் விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Book Spl: ‘Ceo பார்வையில் நாட்டு நடப்பு!’ கைப்பட எழுதிய ஞாயிறு கடிதம்! நூல் விமர்சனம்!

HT Book SPL: ‘CEO பார்வையில் நாட்டு நடப்பு!’ கைப்பட எழுதிய ஞாயிறு கடிதம்! நூல் விமர்சனம்!

Kathiravan V HT Tamil
Apr 06, 2024 02:34 PM IST

“இலக்கியல் நோக்கு என்ற தலைப்பில் அவர் எழுதி உள்ள ஞாயிறு கடிதத்தில் மலேசிய தமிழ் பள்ளிகளில் விஷன் என்ற ஆங்கில சொல்லுக்கு இலக்கியல் நோக்கு என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்தி வருவதையும், தமிழில் பிற மொழிச் சொற்கள் கலக்காமல் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் சுருக்க சொல்லி விளக்கி இருக்கிறார்”

ஞாயிறு கடிதங்கள் நூல் விமர்சனம்
ஞாயிறு கடிதங்கள் நூல் விமர்சனம்

'நம்ம SCHOOL, மக்கள் ID’ என தமிழோடு ஆங்கிலம் சேர்த்து அரசு திட்டம் ஒன்றுக்கு தமிழ்நாடு அரசு பெயர் வைத்ததில் தொடங்கி, மே தினம், ஒடிசா ரயில் விபத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னை, தக்காளி விலையேற்றம், டிஎன்பிஎஸ்சி, சந்திராயன் -3, கலைஞர் உரிமைத் தொகை திட்டம், சட்டசபை இருக்கை, லியோ திரைப்படம், இஸ்ரேல் - ஹமாஸ் போர், கீழடி என உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த சம்பவங்களையும், அதன் மீதான விமர்சனங்களையும் ஆசிரியர் கார்த்திக் சிதம்பரம் தனது பார்வையில் அனுகுகிறார். 

இலக்கியல் நோக்கு என்ற தலைப்பில் அவர் எழுதி உள்ள ஞாயிறு கடிதத்தில் மலேசிய தமிழ் பள்ளிகளில் விஷன் என்ற ஆங்கில சொல்லுக்கு இலக்கியல் நோக்கு என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்தி வருவதையும், தமிழில் பிற மொழிச் சொற்கள் கலக்காமல் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் சுருக்க சொல்லி விளக்கி இருக்கிறார். 

ஞாயிறு  கடிதங்கள் எழுதப்பட்டது ஏன் என்ற கேள்விக்கும் நூலசிரியர் கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார். அதில் நவீன  உலகத்தில்  கைப்பட யார் கடிதம் எழுதுவார்கள்?ஏன் கையில் எழுத வேண்டும்?  என்று எண்ணத் தோன்றும். தமிழில் தட்டச்சு செய்ய  வாய்ப்புகள்  பெரிதாக அமையவில்லை.  பள்ளிகளிலும்  தமிழ் தட்டச்சு சொல்லித்  தரவில்லை.  இதைக்  கற்க  அவசியமும்  ஏற்படவில்லை.

அட்டவணை இல்லாமல் எப்போதாவது எழுதிக்  கொண்டிருந்த வேளையில் வாராவாரம் எழுதி  ஞாயிற்று கிழமை பகிர்ந்தால் என்ன என்று தோன்றியது? நான் எழுதி யார் படிப்பார்கள் என்றும் தோன்றியது? யார் படிக்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொருவரும் எழுத வேண்டும். யாரும் படிக்கவில்லை என்றாலும்  நாம் எழுதியது என்றேனும் ஒரு நாள் நமக்கே பயன்படும். இவ்வாறு தோன்றியதுதான், இந்த நூல்.  ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு கைப்பட எழுதி இணையத்தில் வெளிவந்த  கடிதங்களின் தொகுப்பு தான் ‘ஞாயிறு கடிதம்’. 

இந்தக் கடிதங்களால் என்ன மாற்றம் வந்துவிடப்  போகிறது என்று தோன்றலாம். எழுத்திற்கு  வலிமை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த ஒரு பெரிய மாற்றமும் சிறுசிறு முயற்சிகள் மூலம் தான் உருவாகும். முன்னேற்றம், மாற்றம் விரும்புவோருக்கும் அதைச் செயல்படுத்த விரும்புபவர்களுக்கும் ஞாயிறு  கடிதம் ஒரு கையேடாகக் கூட இருக்கலாம் என கூறி உள்ளார். 

யார் இந்த கார்த்திக் சிதம்பரம்?

கார்த்திக் சிதம்பரம்,  டிசிகாப் என்ற மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர்  மற்றும்  தலைமைச்  செயல் அதிகாரி. அமெரிக்க நாட்டின் சிகாகோவில் உள்ள  தனது  சிறிய குடியிருப்பில் இருந்து இந்நிறுவனத்தைத்  தொடங்கினார். 2 பேர், 2 கணினிகள் மற்றும் 2 மேசைகளுடன் தொடங்கப்பட்டு, இன்று டிசிகாப்  நிறுவனத்தின் மென்பொருள், பல்வேறு உலக நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. கார்த்திக்,  தொழில்துறை நிறுவனங்களில் ஏற்படும்  பின்னடைவுகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கி  வருகிறார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.