இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் திமுக எம்.எல்.ஏவின் மகன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தர்மலிங்கம் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நாளை வெளியாக உள்ள நிலையில், இந்திய ரூபாயை குறிக்கும் ’ ₹’ என்ற இலச்சினைக்கு பதிலாக ‘ரூ’ என்ற தமிழ் எழுத்து இடம்பெற்று உள்ளது விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்திய ரூபாய் குறியீடு உருவாக்கம்
சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் ($), யூரோ (€), பிரிட்டிஷ் பவுண்டு (£), மற்றும் ஜப்பானிய யென் (¥) போன்ற பிற முக்கிய உலக நாணயங்களை அதன் தனித்துவம் மிக்க இலச்சினைகள் அடையாளப்படுத்துகின்றன. இருப்பினும், இந்திய ரூபாய்க்கு நீண்ட நாட்களாக தனிப்பட்ட இலச்சினைகள் ஏதுமில்லாமல் இருந்தது. ஆங்கில வார்த்தையில் Rupees என்ற சுருக்கத்தை தரும் ’Rs’ என்ற சுருக்கத்தையே நீண்டகாலமாக இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர். அதை தமிழில் எழுதும் போது ரூபாயின் முதல் எழுத்தை குறிக்கும் ’ரூ’ என்ற வார்த்தை தமிழ்நாட்டில் புழகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு ₹ என்ற இலச்சினை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலச்சினையை வடிவமைத்தது தமிழ்நாட்டை சேர்ந்த உதயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த உதயகுமார்?
இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தர்மலிங்கம் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். கடந்த 2001ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்த்கில் கட்டடக்கலை பிரிவில் இளங்களை பட்டம் பெற்ற உதயகுமார், 2003ஆம் ஆண்டில் ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில் காட்சி தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் 2010 ஆண்டில் ஐடிசியில் முனைவர் பட்டப்படிப்பையும் முடித்தார்.
கிராஃபில் டிசைனிங், அச்சுக்கலை மீது அதிக ஆர்வம் கொண்ட உதயகுமார், தமிழ் எழுத்துக்கள் வடிவமைப்பிலும் ஆர்வம் கொண்டவர். “பராசக்தி” என்ற எழுத்துருவையும் அவர் வடிவமைத்து உள்ளார். MDIS திட்டத்தின் போது தமிழ் அச்சுக்கலை குறித்த புத்தகத்தையும் அவர் எழுதி வடிவமிஅத்து உள்ளார்.
இந்திய ரூபாய் குறியீடு உருவாக்கம்
இந்திய நாணயத்திற்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்க, நாடு தழுவிய வடிவமைப்புப் போட்டியை மத்திய அரசு நடத்தியது. இந்த வடிவமைப்பு போட்டியில் இறுதியாக 5 பேரின் வடிவமைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் உதயகுமார் வடிவமைத்த இந்திய ரூபாய்க்கான குறியீட்டை ஜூலை 15, 2010 அன்று இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
உதயகுமாரின் வடிவமைப்பு 3,000 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த சின்னம் தேவநாகரி எழுத்து 'र' (ra) மற்றும் லத்தீன் பெரிய எழுத்து 'R' ஆகியவற்றின் செங்குத்து பட்டை இல்லாமல் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மேலே உள்ள இரண்டு கிடைமட்ட கோடுகள் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணக் கொடியைக் குறிக்கின்றன, இது நாட்டின் கொடியையும் சமத்துவ அடையாளத்தையும் குறிக்கிறது, இது பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் இந்தியாவின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என இச்சின்னத்தை வடிவமைத்த உதயகுமார் விவரித்து உள்ளார்.

டாபிக்ஸ்