தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tneb Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் Eb பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

TNEB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

Karthikeyan S HT Tamil
May 21, 2024 10:22 AM IST

TNEB Bill, Hosur farmer: ஒசூர் அருகே விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 550 கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த குறுஞ்செய்தி தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

EB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!
EB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

ட்ரெண்டிங் செய்திகள்

ரூ.8.75 லட்சம் EB பில்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது மொபைலுக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும் மின் கட்டணமாக ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 550 செலுத்த வேண்டும் என மின்சார வாரியத்தில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் தனது மின் கட்டணத்தை முறையாக சரி செய்து தருமாறு கெலமங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ரூ.100 மட்டுமே கட்டணம்

இது குறித்து வெங்கடேஷ் கூறும்போது, "எனது வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் பல்வேறு தொழிலுக்காக வெளியூர் சென்று விடும் நிலையில், மின்சாரம் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால் இரு மாதங்களுக்கு ஒரு முறை வரும் மின் கட்டணம் மிகவும் குறைவாக வரும். தமிழ்நாடு அரசு சார்பில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில், பெரும்பாலும் மின்கட்டணம் செலுத்தாமலும், சில மாதங்களில் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்தோம். 

மின் வாரியத்தில் புகார்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பயன்படுத்திய மின்கட்டணம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 550 கட்டணம் செலுத்த வேண்டும் என மின்சார வாரியத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்து மின் வாரியத்திடம் புகார் கொடுத்துள்ளேன்." என்றார்.

இது குறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில், "மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக வந்த புகாரை விசாரணை செய்ததில், பூஜ்ஜியத்துக்கு பதிலாக 8 பதிவாகி உள்ளது. இதனால் உடனடியாக அந்த பில் திரும்பபெறப்பட்டது. அவர் பில் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை." என கூறினார்.

மின்சார வாரியம் விளக்கம்

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம், "சரி செய்யப்பட்டது. மின் இணைப்பு மறு ஆய்வு செய்யப்பட்டது. மின் உபயோகம் 05462 என்பதற்கு பதிலாக 85490 என்று மனித பிழையின் காரணமாக தவறாக பதிவு ஏற்றப்பட்டுள்ளது. தவறு சரி செய்யப்பட்டு, கட்டண பில் திருத்தப்பட்டது. கட்டவேண்டிய தொகை 'எதுவும் இல்லை'. கணக்கு எடுத்த அதிகாரி மீது குற்றச்சாட்டு குறிப்பாணை தொடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்