katchatheevu: ‘சேதுபதி மன்னர்கள் முதல் இலங்கை வரை’ கச்சத்தீவு பயணித்த வரலாறு தெரியுமா?
1974 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அன்றைய தினம், தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்தது.

katchatheevu: ‘சேதுபதி மன்னர்கள் முதல் இலங்கை வரை’ கச்சத்தீவு பயணித்த வரலாறு தெரியுமா? (instagram/ dilum__dissanayake)
கச்சத்தீவுப் விவகாரம், தேர்தலுக்கு தேர்தல் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வருகிறது. தேர்தல் வந்தால் மட்டுமே, கச்சத்தீவு என்கிற பெயரும் வெளியே வரும். கச்சத்தீவை சுற்றிஒரு அரசியல் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கச்சத்தீவின் வரலாறு என்ன? எப்படி அது கைமாறியது? என்பதை சுருக்கமாகவும், தெளிவாகவும் இங்கே காணலாம்.
கச்சத்தீவு பற்றிய முக்கிய குறிப்புகள்
- கச்சத்தீவு, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பாக் நீரிணையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும்.
- கச்சத்தீவு ராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 12 மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவுக்கு தென்மேற்கே 18 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இது சுமார் 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
- 14 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி கட்டுப்பாட்டில் இருந்தது. 1802 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ராமநாதபுரம் சமஸ்தானத்தை இணைத்தபோது கச்சத்தீவு பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது.
- 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது.1974 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
- அந்தோணியார் தேவாலயம்: 1905 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயம் இங்கு அமைந்துள்ளது.
- மீன்பிடி உரிமை: இந்த ஒப்பந்தத்தின் படி, இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க கச்சத்தீவுக்கு செல்லலாம். ஆனால், அங்கு தங்குவதற்கு அனுமதியில்லை.
மேலும் படிக்க | ‘நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு..’ கச்சத்தீவு விவகாரத்தில் ஆதாரத்துடன் திமுகவை விளாசிய அண்ணாமலை!