மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியை சிபிஐ விசாரிக்கலாம்.. கறார் காட்டிய ஹைகோர்ட்
வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியை சிபிஐ விசாரிக்கலாம்.. கறார் காட்டிய ஹைகோர்ட்
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டதை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிபிஐ விசாரணைக்கு அனுமதி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என கூறி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் எனவும் கூறியிருக்கிறரா்.
