FIR லீக் ஆன விவகாரம்! சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் மாணவியின் அடையாளத்தை குறிப்பிட்டது சட்டப்படி தவறு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மேலும் சென்னை காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”புகார் அளிக்க காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் வருவதற்கே பயப்படும் சுழல்தான் உள்ளது. யார் முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை” என கேள்வி எழுப்பி இருந்தனர்.
மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையை குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.