Savukku Shankar Case: கருத்து சொன்னால் வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை! சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar Case: கருத்து சொன்னால் வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை! சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்!

Savukku Shankar Case: கருத்து சொன்னால் வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை! சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்!

Kathiravan V HT Tamil
Jan 18, 2025 02:56 PM IST

பொதுப்பிரச்னைகளில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக தனிநபர்கள் மீது வழக்குகளைத் தொடுப்பது பாசிச அணுகுமுறையை குறிக்கின்றது என நீதிபதி தெரிவித்து உள்ளார்.

Savukku Shankar Case: கருத்து சொன்னால் வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை! சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்!
Savukku Shankar Case: கருத்து சொன்னால் வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை! சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்!

சவுக்கு சங்கர் மீது வழக்கு

நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நில மோசடி தொடர்பாக தனது யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல்களை பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

ஜாமீன் கேட்டு மேல்முறையீடு

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். 

அரசு மீது நீதிபதி விமர்சனம்

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நடந்தது. பொதுப்பிரச்னைகளில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக தனிநபர்கள் மீது வழக்குகளைத் தொடுப்பது பாசிச அணுகுமுறையை குறிக்கின்றது என நீதிபதி தெரிவித்து உள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்ததற்காக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்து கைது செய்யும் அரசின் சமீபத்திய போக்கு கவலை அளிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. 

தேவையில்லாத கைது நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்த காவல் துறையினரை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதை நினைவு கூர்ந்த நீதிபதி, “வன்முறையை தூண்டினால் மட்டுமே காவல்துறை தலையிடுவது நியாயமாகும். மற்றபடி இல்லை" என தெரிவித்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர் ரிமாண்ட் செய்தாலும் கீழமை நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபர் ஜாமீன் மனுவை முன்வைக்கும் போதெல்லாம் தாராளவாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.