Top 10 Tamil Nadu: Top 10 Tamil Nadu: சர்ச்சைக்குள்ளாகிய உதயநிதி டீஷர்ட் முதல் விஜயின் நன்றி கடிதம் வரை!
தமிழ்நாட்டில் இன்று இரவு வரை நிகழ்ந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் டாப் 10 செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
தீப அரசு பதில்அளிக்க நீதிமன்றம் உத்தரவு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் உதயசூரியன் பொரித்துள்ள டீ ஷர்ட்டை அவர் அணிந்தது சர்ச்சைக்கு உள்ளானது இந்நிலையில் அதற்கு தமிழக அரசை பதில் கூறுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அளித்த மனுவில், 'அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பணிக்கு வரும்போதும் ஆடை கட்டுப்பாடு குறித்தான அரசாணை கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது அந்த அரசாணைப்படி அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளது.இந்நிலையில் துணை முதலமைச்சர் அவரது டீசர்டில் உதயசூரியன் பொறித்து இருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது தற்போது இதற்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விஜயின் நன்றி கடிதம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் வைத்து பிரம்மண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் முதல் அரசியல் மாநாடு முடிவடைந்த நிலையில், நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் கட்சி கொள்கைகளுக்கு எதிர்வினையாற்றி இருக்கும் அரசியல் வாதிகளை கண்டு கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இறவிற்குள் மழை - வானிலை ஆய்வு மையம்
இன்று இரவிற்குள் 20 க்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களில் மழை பெய்யப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய படப்பிடிப்புக்கு தடை
சினிமா தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படப்பிடிப்புகளை நவம்பர் 1 முதல் தொடங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள படங்கள் முடிந்த பின்னே தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் பெப்சி உள்பட பல சங்கங்களுடன் பேசிய பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது .மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இதை நிலைப்பாடு தொடரும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.+
பயண கட்டணங்கள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளை நோக்கமாகக் கொண்டு தனியார் பேருந்துகளும் விமானங்களும் அதன் கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி உள்ளன.
உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்க்கு நிதியுதவி
விஜயின் தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் உயிரிழந்த விபத்தில் உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு இன்று சென்னை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜரானார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மக்கள் வழக்கறிஞர் அமலாக்கத்துறை வழக்கில் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த குறுக்கு விசாரணை முடிவடையாத நிலையில் மேலும் நவம்பர் 7ஆம் தேதி அன்று வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தங்கம் விலை உயர்வு
தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் 7,375 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 58,520 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 59 ஆயிரம் ரூபாய் ஒரு சவரன் தங்கமானது எட்டியுள்ளது.
ஓ. பி.எஸ் மீதான வழக்கு மீண்டும் விசாரணை
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய மதுரை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாமன்ற கூட்டம்
சென்னை மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தனியாருக்கு டெண்டர் விடுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டாபிக்ஸ்