தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Horoscope For March 25

Today Rasi Palan : மார்ச் 25 - பொறுமையாக இருப்பது நல்லது!

Divya Sekar HT Tamil
Mar 25, 2023 06:24 AM IST

மார்ச் 25 ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

ட்ரெண்டிங் செய்திகள்

கடின உழைப்பில் வெற்றி கிடைக்க சற்று தாமதமாகும், எனவே மனம் தளராமல் இருங்கள். புதிதாக சொத்துக்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் தொடங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி

விவசாயத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களில் இருந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு அன்பு அதிகரிக்கும். அரசாங்க வேலை அமைய வாய்ப்புள்ளது.

மிதுன ராசி

பண மழையில் நனையப் போகிறீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். வேலை செய்யும் இடத்தில் சிரமம் இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

கடக ராசி

வியாபாரத்தில் கடுமையான போட்டிகளின் நடுவே வெற்றி காண்பீர்கள். கடன் உதவி தானாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும்.

சிம்ம ராசி

மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உங்களது அந்தஸ்து உயரும். மற்றவர்களை கவரும் அளவிற்கு உங்களது பேச்சு திறமை இருக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். புதிதாக நகை வாங்குவீர்கள், கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் ஏற்படும்.

கன்னி ராசி

உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம் ராசி

பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவுகள் உண்டாகும், செலவு செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தில் எச்சரிக்கை தேவை.

விருச்சிக ராசி

பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் வார்த்தைகளை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்பதை தவிர்த்திடுங்கள். கடன் அன்பை முறிக்கும். கவனமாக இருப்பது நல்லது.

தனுசு ராசி

நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். எதிரிகளை எளிதாக கையாளுவீர்கள். அவதூறான வார்த்தைகள் உங்களைத் தேடி வரும். தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்திடுங்கள்.

மகர ராசி

வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருங்கள். நம்பிக்கை துரோகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்திடுங்கள். வியாபாரம் செல்லும் வழியில் விட்டு விடுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் இருக்காது.

கும்ப ராசி

கடன் சிக்கல்கள் தீரும், சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றிகளைத் தரும். உங்களால் மற்றவர்களுக்கு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மீன ராசி

உங்களைத் தேடி மகிழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்கள் முதலீடு இரட்டிப்பாக திரும்பக் கிடைக்கும். பொறுமையாக இருப்பது நல்லது.

WhatsApp channel

டாபிக்ஸ்