தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல், அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் இன்று (மே 07) முதல் தொடங்கியது.

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று (மே 07) தொடங்கி வைத்தார். பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளங்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் இதோ..
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 07.05.2025
- விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 06.06.2025
- அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 09.06.2025
- ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 11.06.2025
- சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 10.06.2025 முதல் 20.06.2025 வரை
- தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 27.06.2025
- தரவரிசை பட்டியலில் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாட்கள்: 28.06.2025 முதல் 02.07.2025 வரை
- கலந்தாய்வு தொடங்கும் நாள்: ஏஐசிடிஇ நாட்காட்டியின்படி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க | 'முன்கூட்டியே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்! எந்த இணையதளத்தில் பார்ப்பது! முழு விபரம் இதோ!