Heavy rain: 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை எச்சரிக்கை! கன்னியாகுமரியில் 19 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Heavy Rain: 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை எச்சரிக்கை! கன்னியாகுமரியில் 19 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது!

Heavy rain: 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை எச்சரிக்கை! கன்னியாகுமரியில் 19 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது!

Kathiravan V HT Tamil
Published Apr 05, 2025 02:26 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 19 செ.மீ, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 15 செ.மீ, ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Heavy rain: 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை எச்சரிக்கை! கன்னியாகுமரியில் 19 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது!
Heavy rain: 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை எச்சரிக்கை! கன்னியாகுமரியில் 19 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது!

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 19 செ.மீ, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 15 செ.மீ, ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 13 செ.மீ, ஊத்துக்குளி (திருப்பூர்) 12 செ.மீ, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்) 11 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

7 மாவட்டங்களில் மழை நிலவரம் 

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்றைய தினம், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை நிலவரம்

நாளை (06-04-2025) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

07-04-2025 முதல் 11-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

05-04-2025 மற்றும் 06-04-2025: தமிழகத்தில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய

07-04-2025 முதல் 09-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

05-04-2025 மற்றும் 06-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

07-04-2025 முதல் 09-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (05-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (06-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்:

05-04-2025 முதல் 09-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

05-04-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

06-04-2025: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07-04-2025: அந்தமான் கடல் பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08-04-2025: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09-04-2025: தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.