Weather Update: 'மிரட்ட காத்திருக்கும் கனமழை..'தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்!
Weather Update: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 15ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..'தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (மே 12) முதல் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது.
அதிக பட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36° – 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° –29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
