Omni Bus: ஆம்னி பஸ்ஸில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெத்த ஃபைன்; பிறமாநில எண்கொண்ட வண்டிகளுக்கு எண்ட் கார்டு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Omni Bus: ஆம்னி பஸ்ஸில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெத்த ஃபைன்; பிறமாநில எண்கொண்ட வண்டிகளுக்கு எண்ட் கார்டு

Omni Bus: ஆம்னி பஸ்ஸில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெத்த ஃபைன்; பிறமாநில எண்கொண்ட வண்டிகளுக்கு எண்ட் கார்டு

Marimuthu M HT Tamil
Nov 06, 2023 09:04 PM IST

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்ஸில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெத்த ஃபைன்; பிறமாநில எண்கொண்ட வண்டிகளுக்கு எண்ட் கார்டு
ஆம்னி பஸ்ஸில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெத்த ஃபைன்; பிறமாநில எண்கொண்ட வண்டிகளுக்கு எண்ட் கார்டு

மேலும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாகவே தீபாவளி போன்ற பண்டிகை காலங்களுக்கான முன்பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்கி விடுகிறது. குறிப்பாக ரயிலில் முன்பதிவுசெய்ய ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஒன்று இரண்டு நிமிடங்களில் முன்பதிவு முடிந்துவிடும். இந்நிலையில் பெரும்பாலான மக்களின் அடுத்த சாய்ஸ் ஆக ஆம்னி பேருந்துகள் தான் இருக்கின்றன. இந்நிலையில் இந்த பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி பெரும்பாலான ஆம்னிபேருந்துகளில் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திவிடுவர்.

ஆகவே, அரசு அதனை எச்சரிக்கும் விதமாக கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிபேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக, போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம், ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இதுகுறித்துபேசி அரசு நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே மக்களிடம் வசூலிக்க வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்தார். அதனை மீறும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு பெரியளவில் அபாரதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

அதேபோல், வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு, பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்படாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதில் அரசு சமரசம்செய்துகொள்ளாது எனவும் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.