தலைப்பு செய்திகள்: 13 இடங்களில் வெயில் சதம் முதல் வள்ளுவர் கோட்டம் திறப்பு வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
13 இடங்களில் வெயில் சதம், புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை, அமெரிக்க தூதரகம் முற்றுகை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: 13 இடங்களில் வெயில் சதம் முதல் வள்ளுவர் கோட்டம் திறப்பு வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.13 இடங்களில் வெயில் சதம்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெப்பம் சதமடித்தது, இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இரவு நேரத்தில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
2.புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம் திறப்பு
சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவுடன் இன்று திறக்கப்படவுள்ளது. 80 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.