தலைப்புசெய்திகள்: மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு முதல் பக்ரீத் கொண்டாட்டம் வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்புசெய்திகள்: மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு முதல் பக்ரீத் கொண்டாட்டம் வரை!

தலைப்புசெய்திகள்: மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு முதல் பக்ரீத் கொண்டாட்டம் வரை!

Kathiravan V HT Tamil
Published Jun 06, 2025 10:45 AM IST

பக்ரீத் கொண்டாட்டம், மாநிலங்களவை தேர்தல் வேட்புமனுத்தாக்கல், பொறியியல் படிப்பு விண்ணப்பம் நிறைவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்புசெய்திகள்: மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு முதல் பக்ரீத் கொண்டாட்டம் வரை!
தலைப்புசெய்திகள்: மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு முதல் பக்ரீத் கொண்டாட்டம் வரை!

1.பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

கோயம்புத்தூர் மற்றும் நெல்லையில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஜமாஅத் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல், திருமங்கலத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இயக்குநர் அமீர் இந்தத் தொழுகையில் பங்கேற்றார்.

2.பொறியியல் படிப்பு விண்ணப்பம் நிறைவு

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது; இதுவரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

 3.மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள்

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண்கள் என்டிஏ இணையதளத்தில் இருந்து நேரடியாகப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதுவரை சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.

4.மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் சிவலிங்கம் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். ஆதிமுக சார்பில் வழக்கறிஞர் என்பதுரை மற்றும் செங்கல்பட்டு தனபால் ஆகியோரும், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

5.சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அகற்றும்போது அம்பேத்கர் சிலை மீது விழுந்து சேதமடைந்தது. முதலில் சிலையை சரி செய்வதாகக் கூறிய நெடுஞ்சாலைத் துறையினர் பின்னர் மறுத்ததால், விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6.நீலகிரி சிறுத்தை சம்பவம்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையுடன் நாய் சண்டையிட்டது. வேட்டையாட முடியாமல் சிறுத்தை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.

7.நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை விபத்தில் உயிரிழப்பு. 

8.முருகன் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு 

மதுரையில் நடப்பது முருகன் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு. மக்களை பிளவுப்படுத்த கூடிய ஆயுதமாக முருகன் மாநாட்டை சங்கிகள் நடத்துகின்ற்னார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம். 

9.ஹால்டிக்கெட் வெளியீடு 

ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 1, 1 ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

10.மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து 4,741 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் மட்டம் 113.41 அடியாகவும், நீர் இருப்பு 83.349 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம்