Tamil News  /  Tamilnadu  /  Hc Madurai Branch Orders That It Is Not Illegal For A Child To Grow Up Under The Control Of The Father
உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

தந்தையிடம் குழந்தை வளர்வது சட்டவிரோதமா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை பதில்!

25 September 2022, 14:19 ISTSuriyakumar Jayabalan
25 September 2022, 14:19 IST

குழந்தை தந்தையின் கட்டுப்பாட்டில் வளர்வது சட்டவிரோதம் இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா அமிர்த நாயகம் என்பவர் சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த மனுவில்," எனது பத்து வயது மகனைக் கண்டுபிடித்து என்னிடம் தருமாறு பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானம் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இது குறித்து அரசு தரப்பு வழக்குரைஞர், " மனுதாரரின் கோரிக்கை படி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று காவல்துறையினரிடம் அவரது மகன் ஆஜர் படுத்தப்பட்டார் இந்நிலையில் அவரது புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டன" எனத் தெரிவித்தார்.

மேலும் விசாரித்த நீதிபதிகள்," மனுதாரரின் மகன் அவரது தந்தையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். அவ்வாறு இரு குழந்தை இருப்பது சட்ட விரோதமாகக் கருத முடியாது. எனவே இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் அவரது மகனைச் சந்திக்க விரும்பினால் இதற்குச் சம்பந்தப்பட்ட கீழ் நீதிமன்றத்தில் முறையிடலாம்" என வழக்கை முடித்து வைத்தனர்.

டாபிக்ஸ்