Tamil News  /  Tamilnadu  /  Hc Madurai Bench Orders Tnhrc Department To Take Action Against Madurai Atheenam Mutt For Illegal Activities
சட்டவிரோதமாக மதுரை ஆதீனம் மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஒத்திக்கு விடப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோதமாக மதுரை ஆதீனம் மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஒத்திக்கு விடப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

High court: ஆதீன மடங்கள் தவறு செய்தால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கலாம்

19 October 2022, 14:04 ISTMuthu Vinayagam Kosalairaman
19 October 2022, 14:04 IST

ஆதீன மடங்கள் வியாபார நோக்கிய செய்ல்பட எந்த சட்டத்திலும் இடமில்லை. எனவே ஆதீன மடங்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கலாம். ஆதீன மடங்கள் அனைத்தும் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டவை என்று உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான மடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மடத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2008ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள 1,191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு வழங்கு பவர் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து 2018ஆம் ஆண்டு பத்திரப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதின மட சொத்துக்கள் தனியாருக்கு ஒத்திக்கு விடப்பட்ட ஆவணங்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். பின்னற், ஆதீனமடங்கள், மடங்களாக செயல்படுகிறதா? அல்லது வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதுபோன்று மடத்துக்கு சொந்தமான சொத்துக்களை ஒத்திக்கு விடுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து அறநிலைய துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து அறநிலைய துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் ஏதும் அள்ளப்பட்டு வந்தால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

டாபிக்ஸ்