HBD Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!
HBD Nammalvar : அவர் புதுக்கோட்டையில் ஆராய்ச்சி மையத்தை துவங்கினார். வரலாற்று சிறப்புமிக்க மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஆதரித்தார்.

நம்மாழ்வார், 1938ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தார். 2013ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி இறந்தார். பசுமை புரட்சியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை வேளாண் விஞ்ஞானி, இயற்கை விவசாயத்தை பரப்புவதற்காக பாடுபட்டவர். இவர் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடினார்.
இவர் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்து பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை எழுதியுள்ளார். இது பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளங்காடு என்ற கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக்கத்தில் வேளாண்மையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியத்துவங்கினார்.