HBD Lincoln: மக்களாட்சியின் ‘மன்னர்‘ மட்டுமல்ல… மகன்களின் சிறந்த தந்தை லிங்கன்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Lincoln: மக்களாட்சியின் ‘மன்னர்‘ மட்டுமல்ல… மகன்களின் சிறந்த தந்தை லிங்கன்

HBD Lincoln: மக்களாட்சியின் ‘மன்னர்‘ மட்டுமல்ல… மகன்களின் சிறந்த தந்தை லிங்கன்

Priyadarshini R HT Tamil
Feb 12, 2023 06:18 AM IST

Happy Birthday Abraham Lincoln: அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கனின் பிறந்த நாள் இன்று. அவர் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை இங்கு காண்போம்.

அப்போது அவர்கள் பள்ளி சென்ற காலத்தில், ஆசிரியர் தன் மகன்களுக்கு என்னவெல்லம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அதன் விவரம் கீழே… 

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு...

என் மகனுக்கு, அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையானவர்களும் அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பதுபோல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பதுபோன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் கற்றுக்கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். 

அதேவேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள். 

இவ்வாறு தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு, ஆபிரகாம் லிங்கம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.