தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Hbd Eps, Political Journey Of Aiadmk's General Secretary Edappadi Palaniswami

HBD EPS: இபிஎஸ் பிறந்த நாள் இன்று; சாதித்தது என்ன? - அதிமுகவில் வளர்ந்து வந்த பாதை!

Karthikeyan S HT Tamil
May 12, 2023 05:15 AM IST

HBD Edappadi Palaniswami: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாள் இன்று (மே 12). இந்நாளில் அதிமுகவில் அவர் கடந்து வந்த பாதையை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

இபிஎஸ்
இபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நாளில், சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் முதல் பொதுச் செயலாளர் வரை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதையை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

  • சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் 1954-ஆம் ஆண்டு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பழனிசாமி. ஆரம்ப கல்வியை அதே ஊரில் பயின்றார்.
  • தனது 17-வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட தீராத பற்றினால் அவருக்கு ரசிகர் மன்றத்தை சிலுவம்பாளையத்தில் தொடங்கினார்.
  • 21 வயதில் கல்லூரி படிப்பை முடித்த உடனே வெல்லம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
  • பின்னர் 1972-ம் ஆண்டு அதிமுகவில் தொண்டராக இணைந்தார். அயராது ஆற்றிய பணியால் 1973-ஆம் ஆண்டு அவருக்கு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவி கிடைத்தது.
  • 1989-ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவைத் தொடர்து, அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் இருந்தார்.
  • 1989-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பாக எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றத்தில் காலடி வைத்தார். அதன்பின்னர், அவரது பெயருக்கு முன்பு எடப்பாடி சேர்ந்து எடப்பாடி பழனிசாமியாக பிரபலமானார்.
  • 1990 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் சேலம் வடக்கு மாவட்டத்திற்கு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1991ல் மீண்டும் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 1996, 2006ல் தோல்வி அடைந்தார். 1998-ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
  • தொடர்ந்து 2011, 2016ல் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருமுறையும் அமைச்சரானார்.
  • அதிமுக மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் கொள்கை பரப்புச் செயலாளர் என கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
  • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி முதன்முறையாக தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.
  • 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.
  • பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி தற்போது உயர்ந்துள்ளார்.

பல்வேறு சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் நடந்தாலும் அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் உட்சபட்ச பதவியான பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 69வது பிறந்தநாள் (மே 12). வாழ்த்துக்கள் இபிஎஸ்..!!

IPL_Entry_Point

டாபிக்ஸ்