HBD Annai Maniammaiyar : பெரியாரின் கொள்கைகளை தாங்கிப்பிடித்த அன்னை மணியம்மையார் பிறந்த தினம் இன்று!
HBD Maniammaiyar : பெண்களுக்கு என்று சமூகம் ஒதுக்கி வைத்துள்ள வாழ்க்கையை வாழ அவருக்கு விருப்பமில்லை. இவர் இயக்கத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். பெரியாரின் நம்பிக்கைக்கு உரிய தொண்டரானார்.
மணியம்மை, கனகசபையின் மகள், இவர் சமூக நீதி கட்சியின் உறுப்பினர். சுயமரியாதை இயக்க கொள்கைகளை நம்பியவர். அவரின் 20 வயதுகளில் அவரது தந்தை இறந்த பின்னர் மணியம்மை திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். இவர் திருமணத்தில் ஆர்வமின்றி இருந்தார்.
பெண்களுக்கு என்று சமூகம் ஒதுக்கி வைத்துள்ள வாழ்க்கையை வாழ அவருக்கு விருப்பமில்லை. இவர் இயக்கத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். பெரியாரின் நம்பிக்கைக்கு உரிய தொண்டரானார்.
இவர் பெரியாரின் வயோதிக காலத்தில் அவரை கவனித்துக்கொண்டார். பின்னர் அவரின் அரசியல் வாரிசானார். பெரியார் தனது தனிப்பட்ட சொத்துக்களை வைத்து துவங்கிய அறக்கட்டளையை வழிநடத்தும் பொறுப்பை பின்னாளில் அன்னை மணியம்மையாரிடம் ஒப்படைத்தார். 1949ம் ஆண்டு நடந்த அவர்களின் திருமணம் மணியம்மையை பெரியாரின் வாரிசாக மாற்றியது.
1973ம் ஆண்டு பெரியார் இறந்த பின்னர் அவரது வாரிசாகி திராவிடர் கழகத்தின் தலைவரானார். அவர் இறக்கும் வரை அக்கழகத்தின் தலைவராகி கழகத்தை பார்த்துக்கொண்டார். இவர்களின் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து பெரியாரும், இது சொத்துக்களை காப்பாற்றுவதற்கான சட்ட நடைமுறை என்று அதற்கு விளக்கமளித்தார்.
மணியம்மை, சமூக போராளி. தன்மான தலைவர். திராவிடர் கழக தலைவரானவுடன், பெரியார் இறந்த பின் உடைய இருந்த கழகத்தை காப்பாற்றினார்.
இவர் பெண்கள் நலன் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டார். பெண் குழந்தைகளுக்கு அனாதை விடுதிகளையும், ஆதரவற்ற பெண்களுக்கு நலவிடுதிகளையும் துவக்கினார். எமர்ஜென்சி காலத்தில் சென்சார்ஷிப்க்கு எதிரான போராட்டங்களை நடத்தினார். ராம லீலா கொண்டாட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ராவண லீலா போராட்டங்களை 1974ம் ஆண்டு நடத்தினார். அதற்காக கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் முற்காலத்தில் தோன்றிய மற்றும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய தலைவராக மணியம்மை இருந்தார். அவரைவிட 25 வயது அதிகம் உள்ள தமிழ் கவிஞர் பாரதிதாசன் மணியம்மையை அன்னை என்று அழைத்தார்.
பெரியாருடனான அவரது திருமணம் குறித்து அவரை விமர்சிப்பதுடன் அவர் குறித்த பேச்சுக்களை சுறுக்கிக்கொள்வது தவறு. மணியம்மை குறித்து தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் மற்றும் வீரமணியின் அன்னை மணியம்மையின் சிந்தனை முத்துக்கள் ஆகிய புத்தகங்களை படித்தால் அவரின் புகழை நாம் தெரிந்துகொள்ள முடியும். தமிழக அரசியல் வரலாற்றில் 1900களின் அரசியலில் முக்கியமாக இருந்த பெண் தலைவர்களுள் ஒருவர் அன்னை மணியம்மையார் என்றால் அது மிகையாகாது.
இவர்களின் திருமணம்தான் திராவிடர் கழகம் உடைய காரணமாக இருந்ததாக நம்பப்பட்டது. இந்த பிளவு தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருந்தது. சி.என்.அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் இயக்கத்தில் இருந்து விலகி, அரசியலில் குதித்தனர். புதிய கட்சி துவங்கினர். அக்கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். இதனால் அவர் பெண்குலத்துக்கு செய்த தொண்டுகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டது. ஆண்கள் கோலோச்சிய அரசியலில் தனிப்பெண்ணாய் அவர் பட்ட துன்பங்கள் மற்றும் திகவுக்கு அவரின் உழைப்புகள் அனைத்தும் பெரிய கவனம் பெறவில்லை.
இவரது இயற்பெயர் காந்திமதி, இவர் 1917ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை கனகசபை முதலியார். இவர், அந்த காலத்தில் பெண் குழந்தைகள் விளையாடும் வீட்டுக்குள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களை விளையாடியவர் அல்ல.
ஆண்களுக்கு இணையாக சடுகுடு ஆடியவர் என கொளத்தூள் மணி இவர் குறித்து புகழ்ந்துள்ளார். மணி, பெரியாரியவாதி. இது அன்னை மணியம்மையாரின் புகழை உணர்த்துவதாகும். பெரியாரின் பேச்சுக்களை புத்தக வடிவில் கொண்டுவந்தார். அதை திராவிடர் கழக கூட்டங்களில் விநியோகம் செய்தார். இதுதான் மணியம்மையை பெரியார் சொத்துக்கான வாரிசாக தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்தது.
இவர்தான் பெரியாரின் சொத்துக்கள் அத்தனையும் சுயநலமின்றி, மக்களுக்கு கொடுப்பார் என்பதை பெரியார் உணர்ந்தார். இவர்களின் திருமணத்தின்போது பெரியாருக்கு வயது 70 மணியம்மையாருக்கு வயது 32. இது அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அப்போது அவர் மீதான அவதூறுகளை எந்த ஒரு பெண்ணாலும் தாங்கிக்கொள்ள இயலாது. சமூகம், இந்த சமூகத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ஒரு பெண் எடுக்கும்போது எத்தனை குரூரமாக நடந்துகொள்ளும் என்பது அன்னை மணியம்மையாரின் திருமணத்தில் இந்த உலகம் கண்கூடாக கண்டது. ஆனால் அவை எதையும் அன்னை கண்டுகொள்ளவில்லை.
இவர் இறக்கும் வரை திராவிடர் கழகத்தை வளர்த்தெடுத்தார். இங்கிருந்து காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு செல்வதை தடுக்க தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9