Passport: உங்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதா? விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான பரிசீலனை என்ன?
உங்கள் விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் புதிய பாஸ்போர்ட் அஞ்சல் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.

Passport: உங்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதா? விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான பரிசீலனை என்ன?
உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதா? மீண்டும் அதை புதுப்பிக்க விரும்புகிறீர்களா? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்கள் வெளிநாட்டு பயணத்திற்கு புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் கட்டாயம். எனவே, பாஸ்போர்ட் புதுப்பிக்கும் முறை பற்றி இங்கு அறியலாம்:
புதுப்பித்தலுக்கான நடைமுறை பின்வருமாறு:
1. ஆன்லைன் விண்ணப்பம்:
- பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்குச் செல்லவும்: இந்த லிங்கை க்ளிக் செய்தால் உள்ளே நுழையலாம்
- புதிய பயனராக இருந்தால், பதிவு செய்யவும். ஏற்கனவே கணக்கு இருந்தால் உள்நுழையவும்.
- "Apply for Fresh Passport/Re-issue of Passport" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- "Re-issue of Passport" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பாஸ்போர்ட் காலாவதியானதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும் ("Validity Expired").
- விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்பவும். அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளிடவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் படிக்க | அசால்ட்டாக 60 கோடியை தாண்டிய அஜித்தின் குட் பேட் அக்லி! வெளியான 3 ஆவது நாள் வசூல்! எவ்வளவுத் தெரியுமா?