தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Gun Confiscated From The House Of A Hindu Front Party Volunteer!

Coimbatore: இந்து முன்னணி பிரமுகரின் துப்பாக்கி பறிமுதல்! பகீர் பின்னணி இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 29, 2023 06:16 AM IST

சில நாட்களுக்கு முன் கோவை சரவணம்பட்டி பகுதியில் சஞ்சய் ராஜா என்ற ரவுடியிடம் 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரனிடம் இருந்து 2 கள்ளத் துப்பாக்கிகளும்,தோட்டா உட்பட ஆயுதங்களும் பறிமுதல்

அயோத்தி ரவி
அயோத்தி ரவி

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை புலியகுளம் மசால் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்கிற அயோத்தி ரவி. இவர் பல இந்து இயக்கங்களில் இருந்து வந்துள்ளார். தற்போது அயோத்தி ரவி இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்

இவரது வீட்டில் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலை அவரது இல்லத்தில் சோதனை நடத்திய கோவை போலீசார் இரண்டு நாட்டு துப்பாக்கிகளையும்,

5 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கோவை நகரில் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் ஈடுபட்டு வந்த அயோத்தி ரவியிடம் துப்பாக்கிகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில்

கடந்த மார்ச் 23ம் தேதி மாலை தனது வீட்டில் தனது 4 வயது மகள் பூமாதேவிக்கு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து இருந்ததும், அதற்கு வந்த தனது நண்பரான தீபக்கிடம் தனது கள்ள துப்பாக்கியை காட்டியபோது எதிர்பாராத விதமாக அதிலிருந்து வெளியேறிய தோட்டா தீபக்கின் இடது தொடையில் பாய்ந்தது குறித்தும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அயோத்தி ரவி தனது நண்பர் தீபக் என்பவருக்கு தடாகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அயோத்தி ரவி மற்றும் அவரது நண்பர் ஆனந்த் ஆகியோர் தீபக்கை தென்னாம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்று, காட்டுப்பன்றியை வேட்டையாடச் சென்றபோது தீபக் காலில் தோட்டா பாய்ந்து காயம் அடைந்ததாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார், ராமநாதபுரத்தில் உள்ள அயோத்தி ரவி வீட்டில் சோதனை செய்த போது, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், ஐந்து துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஏர் கன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் அயோத்தி ரவியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2018 ம் ஆண்டு செல்வபுரத்தைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 40 நாட்களுக்கு முன்பு சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பாட்டில் பாஸ்கர் (45) என்பவரின் உதவியுடன் மற்றொரு பிஸ்டலை வாங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அயோத்தி ரவியை கைது செய்துள்ள காவல் துறையினர் இரு கள்ள துப்பாக்கிகளையும், ஒரு ஏர் கன்னையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் துப்பாக்கி கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் கோவை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை சரவணம்பட்டி பகுதியில் சஞ்சய் ராஜா என்ற ரவுடியிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரனிடம் இருந்து இரண்டு கள்ளத் துப்பாக்கிகளும்,தோட்டா உட்பட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்