தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Governor Rn Ravi Refused To Read Governor's Speech In Tamil Nadu Legislative Assembly

TN Assembly: ’ஆரம்பமே கோதா!’ ஆளுநர் உரையை புறக்கணித்தார் ஆர்.என்.ரவி!

Kathiravan V HT Tamil
Feb 12, 2024 10:16 AM IST

”TN Assembly: நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஆளுநர், உரையை புறக்கணிப்பதாக கூறிவிட்டார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழ் பதிப்பை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசித்து வருகிறார்”

ஆளுநர் உரை
ஆளுநர் உரை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புத்தாண்டு கூடுதல் மகிழ்ச்சியையும், நல்வரவையும் கொண்டு வரட்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, “பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற குரலை வாசித்தார். தொடர்ந்து பேசுகையில், என்னுடைய தொடர் கோரிக்கை, அறிவுரை என்னவென்றால் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்.

நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியாது என்ற அவர் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி! என்று கூறி தமது உரையை முடித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழ் பதிப்பை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசித்து வருகிறார்.

ஆளுநர் உரையும்! சர்ச்சைகளும்! 

சென்ற ஆண்டு நடந்த உரையில் திராவிட மாடல், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரை வாசிக்காமல் இருந்துடன், தேசிய கீதம் இசைக்கப்படும் முன்னரே கூட்டத்தை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

WhatsApp channel