RN Ravi : ஆளுநர் வெளியேற்றத்துக்கு முன் நடந்தது என்ன? வெளியேறிய பின் நடந்தது என்ன?
இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை, சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் குண்டுகட்டாக அங்கிருந்து அப்பறப்படுத்தப்பட்டனர்
சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருந்தார். அதற்காக அவர் உள்ளே வந்த போது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ‘அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்’ என்று முழக்கமிட்டார். காங்கிரஸ் கட்சியும் அதையே வலியுறுத்தி கோஷமிட்டது.
இதற்கிடையில், ‘யார் அந்த சார்?’ என்கிற கோஷத்துடன் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநர் உரைக்கு முன்பாக, அதிமுகவினரின் அமளி தொடர்ந்ததால், ‘தேசிய கீதம் இசைக்குமாறு’ ஆளுநர் ரவி தெரிவித்தார். ஆனால், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாக கூறி, ஆளுநர் தன்னுடைய உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார்.
காங்கிரஸ் வெளிநடப்பு.. அதிமுக வெளியேற்றம்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், செல்வப் பெருந்தகை தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை, சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் குண்டுகட்டாக அங்கிருந்து அப்பறப்படுத்தப்பட்டனர்.
‘யார் அந்த சார்?’ என்கிற பதாகையுடன் வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், அரசுக்கு எதிராகவும், அண்ணா பல்கலை கழக சம்பவத்தை கண்டித்தும் கோஷம் எழப்பினர். அதன் பின் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அறையில், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தான் வெளிநடப்பு செய்ததற்காக காரணமாக கூறி, ஆளுநர் மாளிகையில் ஒரு எக்ஸ் தள பதிவு போடப்பட்டடது. அதில், மீண்டும் தேசிய கீதம் புறக்கணிப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின், சிறிது நேரத்தில் அந்த எக்ஸ் தளப்பதிவு நீக்கப்பட்டது.
ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறியதால், அந்த உரையின் தமிழ் பெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
ஆளுநர் மாளிகை தரப்பு எக்ஸ் தள விளக்கம்
இதற்கிடையில் முதலில் டெலிட் செய்யப்பட்ட ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் மற்றொரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், ஆளுநர் ஏன் புறக்கணித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என, கவர்னர் கடும் வேதனையுடன் சபையை விட்டு வெளியேறினார்,’
என்று அந்த பதிவில் ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்