Chennai Bus Strike : சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி.. காரணம் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Bus Strike : சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி.. காரணம் இதுதான்!

Chennai Bus Strike : சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி.. காரணம் இதுதான்!

Divya Sekar HT Tamil
May 29, 2023 07:10 PM IST

சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்
சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்

மாலை நேரம் என்பதால் வேலைக்கு சென்று திரும்புவோர் அவதியடைந்தனர்.போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து சென்னையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயங்க தொடங்கியது. போக்குவரத்து அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்களின் திடீர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மாநகரில் உள்ள 33 பணிமனைகளிலும் திடீரென நிறுத்தப்பட்ட போருந்துகள் வழக்கம்போல் இயங்கியது. பிராட்வே, கோயம்பேட்டில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 நிமிடங்களில் அனைத்து பகுதிகளிலும் வழக்கமான பேருந்து சேவை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று சேர விதிகளுக்கு உட்பட்டு கட்டணங்கள் வசூலிக்குமாறு ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி உரிமையாளர், ஓட்டுநர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலமைச்சர் தமிழ்நாடு திரும்பியதும் பேசி முடிவெடுக்கலாம் என சொல்லி இருக்கிறோம்; அதன் அடிப்படையில் வழக்கமான பேருந்து சேவை இருக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.