Gold Rate Today: கிறிஸ்துமஸ் தினத்தில் உயர்ந்த தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.25) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை ஆகின்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,100-க்கு விற்பனை ஆகின்றது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.24) சவரனுக்கு ரூ.80-குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,090-க்கு விற்பனை ஆனது.