Gold Rate Today: 2வது நாளாக சரிந்த தங்கம்! இதுதான் சமயம்! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
Gold Rate Today: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Gold Rate Today 28.01.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 28) சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 60,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 30 ரூபாய் குறைந்து 7,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜனவரி 27) சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 60,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7,540-க்கு விற்பனை செய்யப்பட்டது.