தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமா?.. ஜூன் 25, 2025 இன்றைய நிலவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமா?.. ஜூன் 25, 2025 இன்றைய நிலவரம் இதோ!

தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமா?.. ஜூன் 25, 2025 இன்றைய நிலவரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Jun 25, 2025 10:13 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய (ஜூன் 25) விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமா?.. ஜூன் 25, 2025 இன்றைய நிலவரம் இதோ!
தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமா?.. ஜூன் 25, 2025 இன்றைய நிலவரம் இதோ!

இந்த நிலையில் நேற்று (ஜூன் 24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ.680க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.72,560-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.9,070க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 24) ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,155-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.119க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.119,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நேற்று (ஜூன் 24) ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.120,000-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.