இன்றைய தங்கம் விலை நிலவரம்: 8 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Gold Rate Today 24.02.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (பிப்ரவரி 24) ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.8,055க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று (பிப்ரவரி 23) ஒரு சவரன் ரூ.64,360 விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,045 விற்பனை செய்யப்பட்டது.