கணிசமாக குறைந்த தங்கம் விலை.. ஜூன் 17ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 17) கணிசமாக குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் என மாறி மாறி காணப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் நேற்று (ஜூன் 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.9,305க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (ஜூன் 17) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 17) சவரனுக்கு ரூ.840 குறைந்து, ஒரு சவரன் ரூ. 73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு காரணமாக தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 9,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.