Gold Rate Today: ’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gold Rate Today: ’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Gold Rate Today: ’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Kathiravan V HT Tamil
Published Feb 17, 2025 10:09 AM IST

Gold Rate Today: சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.

Gold Rate Today: ’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Gold Rate Today: ’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம் :

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (பிப்ரவரி 17) ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.7,940க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று (பிப்ரவரி 16) ஒரு சவரன் ரூ.63,120 விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,890 விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை இன்று மாற்றம் இன்றி (பிப்ரவரி 17) ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.108,000க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டம்

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.