தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Gold Price,fever Camp Trending News For Tamilnadu On Septembar 20

Gold price : தங்கம் விலை,காய்ச்சல் சிறப்பு முகாம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Divya Sekar HT Tamil
Sep 20, 2022 05:15 PM IST

தங்கம் விலை,காய்ச்சல் சிறப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

தங்கம் விலை
தங்கம் விலை

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் 1000 இடங்களில் நாளை காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகள் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

மனைவியின் நினைவு நாளில் அவரின் பிரிவு துயர் தாங்காமல் அவரை மாதிரியே பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டம் தென்னிலையில் தோட்டத்து தண்ணீர் தொட்டியில் குளித்தபோது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை அனைத்தும் மீண்டும் வழங்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சட்டமன்ற தொக்குதியில் நாளை சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆம்னி பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அக்டோபர் 2ம் தேதி போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை முன்னேற்றும் திட்டங்களுக்கு மோடி அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எம்.பி., சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு மக்கள் நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

எம்பிபிஎஸ் ,பிடிஎஸ் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point