தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 13, 2023 10:28 AM IST

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை நிலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று (செப்.13) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

இன்றைய தங்கம்விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.13) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனால் ரூ.43,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 40 குறைந்து, கிராமுக்கு ரூ.5480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்.12) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 77 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்