அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஞானசேகரனுக்கு 15 நாள் சிறை.. கை, கால் உடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி!
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்.
தமிழகத்தில் இன்று காலை நாம் அறிய வேண்டிய முக்கிய செய்திகளின் தொகுப்பு:
ஞானசேகரனுக்கு 15 நாள் சிறை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு. இருப்பினும் கைதின் போது, தப்பியோட முயற்சித்தபோது கை, காலில் முறிவு ஏற்பட்டு உள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
கை, காலில் காயம்.. மாவு கட்டு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்
அதிமுக சார்பில் இன்று ஆர்பாட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக கூறி, அதிமுக சார்பில், இன்று அண்ணா பல்கலை முன்னாக காலை 10 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. எதிர்கட்சிகள் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.