மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர்
மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர்
![மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர் மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர்](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/27/550x309/ghana_sekaran_1735274585145_1735274585406.png)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக பின்புற நடைபாதையில் பிரியாணிக்கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக போலீசார் ஞானசேகரனை கைது செய்யும் போது தப்பி ஓடியதால் கீழே விழுந்து இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திடீர் திருப்பம்:
அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டும் போது ஞானசேகரனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் யார் என்பது குறித்தும், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் செல்போன் அழைப்புகளை பட்டியலிட்டும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞானசேகரன் உடன் ஒருவர் வந்ததாக மாணவி புகார் அளித்திருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த செல்போன் எண்களை சேகரித்து சைபர் க்ரைம் போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். அந்த நபர் யார்?, அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான மாணவியின் அடையாளங்கள்:
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெயர், முகவரியுடன் எஃப்ஐஆர் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. முழு விவரங்களுடன் அவசரமாக ஆன்லைனில் எஃப்ஐஆரை பதிவேற்ற வேண்டிய அவசியம் என்ன? பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதற்கு காவல்துறை, பல்கலைக்கழகம் பொறுப்பேற்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவருடைய அடையாளங்களை வெளியிடுவதற்கான காரணம் என்ன? இதுதான் காவல்துறையின் செயலா என பெற்றோர்களும், மாணவர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவியின் அடையாளங்கள் வெளியில் தெரியாதபடி இணையதளங்களில் முடக்கப்பட்டன.
யார் இந்த பிரியாணி ஞானசேகரன்?:
பிரியாணி ஞானசேகரன் தொடர்பாக அவரது பக்கத்து வீட்டு அம்மா அளித்த பேட்டியில், ‘’இந்த ஏரியாவில் கடை வைச்சிருப்பார். பிரியாணி ஞானசேகரனுக்கு இரண்டு பொண்டாட்டி. அப்புறம் திருப்பி ஏதோ ஒரு பொண்டாட்டியைக் கட்டியிருக்கான்னு சொல்றாங்க. மூன்று பொண்டாட்டி நிரந்தரமாக இல்லை. இரண்டுதான் இருக்கு.
அவங்கம்மா எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்காங்க. அவங்க சின்ன பையன் மட்டும் தான் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கான். பெரியவன், பெரியவன் பொண்டாட்டி இரண்டுபேர், அவங்க அம்மா கூட இருந்தாங்க. ரவுடித்தனம் பண்ணிட்டுக் கிடந்தான்.
கொஞ்சநாள் நல்லாத்தான் ஓடிக்கிட்டு இருந்தது. பரவாயில்ல திருந்தியிருக்கிறான். பிரியாணி வியாபாரம் செய்றான். சர்ச் கோயிலுக்குப் போனான். அப்பம் கொடுக்கும்போது ஃபேமிலியாக போவான். வருவான். ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்கான். கோயில்களுக்கு எல்லாம் வந்து டான்ஸ் ஆடுவாங்கல்ல. அதில் மூன்றாவதாக ஒரு பிள்ளையை சேர்த்துக்கிட்டார். கல்யாணம் பண்ணல. இரண்டு பொண்டாட்டி வைச்சிருந்தாலும் ஒழுங்காக தான் வைச்சிருக்காங்கன்னு நாங்க நினைச்சிருந்தோம். இப்ப திரும்பவும் கடைசியில் இப்படி ஆகிப்போச்சு. ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு பொண்டாட்டி இருக்கும்போது இவனுக்கு இதுஎல்லாம் எதுக்குன்னு நாங்களே சொல்லிக்கிட்டோம்’’ என சொல்லிமுடித்தார், பக்கத்துவீட்டு அம்மா.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்