Gmail: மின்னஞ்சல் சேவையில் எப்போதும் முன்னிலை – ஜிமெயில் அறிமுகமான தினம் இன்று
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gmail: மின்னஞ்சல் சேவையில் எப்போதும் முன்னிலை – ஜிமெயில் அறிமுகமான தினம் இன்று

Gmail: மின்னஞ்சல் சேவையில் எப்போதும் முன்னிலை – ஜிமெயில் அறிமுகமான தினம் இன்று

Priyadarshini R HT Tamil
Apr 01, 2023 06:20 AM IST

Check Your Inbox : கூகுள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை துவங்கிய தினம் இன்று. இன்றைய நாளில் நாம் கூகுள் ஜிமெயில் சேவையின் வசதிகள் மற்றும் அதன் வளர்ச்சியை தெரிந்துகொள்வோம்.

2020ம் ஆண்டு வரை ஜிமெயில் பயன்படுத்திய லோகோ
2020ம் ஆண்டு வரை ஜிமெயில் பயன்படுத்திய லோகோ

மனிதர்கள் வாழ்வில் நினைத்து பார்க்க முடியாத பிரமாண்ட வளர்ச்சிகளை கொடுத்தது தொழில்நுட்ப புரட்சிதான் என்றால், அதன் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அதற்கு பக்கபலம் சேர்த்தது. அந்த வகையில் இமெயில்களின் வருகை நமக்கு வரப்பிரசாதம்தான். இமெயில்களில் நொடியில் ஒரு தகவலை மற்றொருவரிடம் கொண்டுபோய் சேர்த்துவிட முடிவதால் தொழில் ரீதியான தகவல் பரிமாற்றங்களில் இமெயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. 

கூகுள் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் வருகைக்குப்பின்னர், அதன் போட்டி நிறுவனங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதே கதைதான் இமெயில்கள் விஷயத்திலும் நடந்தது. இ-மெயில் என்றால் எலெக்ட்ரானிக் மெயில் என்று பொருள். ஆங்கிலத்தில் உள்ள எலெக்ட்ரானிக் என்ற வார்த்தையின் முதல் எழுத்தை சுருக்கி இமெயில் என்று வைத்தனர். அதாவது கணினி வழியாக பரிமாறிக்கொள்ளப்படும் அனைத்து தகவல்களும் இமெயில் என்று அழைக்கப்படும். மின்னணு மூலம் தகவல் பரிமாற்றம் என்பதன் அடிப்படையில் இந்த பெயர் வைக்கப்பட்டது. 

ஆனால், 2004ம் ஆண்டு கூகுள் தனது மெயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பின்னர் அது ஜிமெயில் என்றே மாறிவிட்டது. அதற்கு முன்னர் கூட பல்வேறு போட்டியாளர்களின் இமெயில் சேவையை பயன்படுத்தியவர்கள் கூட ஜிமெயில் வந்த பின்னர் ஜிமெயில் ஒரு மெயில் ஐடியை ஆரம்பித்துக்கொண்டார்கள். அந்தளவு மற்றவர்களைவிட படுவேகமாக ஜிமெயில் அனைத்து இடங்களிலும் பரவியது. 

கூகுளின் வருகைக்குப்பின் சில போட்டி நிறுவனங்கள் களத்திலே இல்லாமல் போயின. அந்த அளவுக்கு கூகுளின் தாக்கம் இன்று வரை இருக்கிறது. மற்றவர்களைவிட போட்டியில் முன்னிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக ஜிமெயில் ஒரு ஜிகாபைட் வரை சேமிக்கும் திறனை 2004ம் ஆண்டு துவங்கிய காலத்திலே வழங்கியது. அந்த காலகட்டத்தில் இது மற்ற போட்டியாளர்களைவிட அதிகம். ஜிமெயிலின் புகழுக்கு அதுவே வித்திட்டது. தற்போது 15 ஜிகாபைட்கள் சேமிக்கும் திறனை வழங்குகிறது. கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் என அதில் பல்வேறு வசதிகள் உள்ளன. 50 மெகாபைட் அளவுக்கு இமெயில்களை அனுப்பவும், பெறவும் முடியும் என்பது இதன் தனித்துவம். பெரிய அளவுகள் கொண்ட பைல்களை அனுப்புவதற்கு பயனாளர்கள், கூகுள் டிரைவ்களை பயன்படுத்தலாம். தேவையான குறிப்பிட்ட தகவல்களை தேடிப்பெறும் வசதியும் இதில் உண்டு. மேலும் நமக்குத்தேவையில்லாத தகவல்களை தானாவே அழித்துக்கொள்ளும் செட்டிங்குகளையும் நாம் செய்து வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட ஜிமெயில் இன்றும் மின்னஞ்சல் தொடர்பில் முன்னிலை வகிக்கிறது.    

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.